Home இலங்கை அரசியல் 2024 – பொதுத் தேர்தல் தொடர்பில் விக்னேஸ்வரன் தரப்பின் தீர்மானம்

2024 – பொதுத் தேர்தல் தொடர்பில் விக்னேஸ்வரன் தரப்பின் தீர்மானம்

0

சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம்(30.09.2024) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ, இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. 

Source: https://ibctamil.com/article/2024-general-election-cv-vigneswaran-1727702448

NO COMMENTS

Exit mobile version