Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு

தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு

0

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலனை செய்ய உள்ளதாக தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் தமிழ்
தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது
தொடர்பில் பரிசீலனை செய்ய உள்ளது. 

மத்திய குழு கூட்டம்

கடந்த சனிக்கிழமை வவுனியாவில் தமிழரசு கட்சியின்
மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது
வேட்பாளர்களை தயார்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பயணித்ததைப் போன்று
இம்முறையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து தேர்தலில் போட்டியிடும்
கோரிக்கை சக தமிழ் கட்சிகளிடம் முன்வைக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடுவதற்கு சக தமிழ் கட்சிகள்
இணங்காவிட்டால் வேறு வழியில்லை. தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட வேண்டிய
நிலைக்கு தள்ளப்படும்.

அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் கொழும்பிலும் தமிழரசு கட்சி போட்டியிட
வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

சக தமிழ் கட்சிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் பதில்கள் அடிப்படையில்
எதிர்வரும் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ள தமிழரசுக் கூட்டத்தில் இறுதி முடிவு
எடுக்கப்படலாம்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version