தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்
பரீட்சை வினாத்தாள்கள் வெளியேறுவதில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினையை தீர்த்து புதிய அட்டவணையில் கீழ் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் வெளியானமை தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பரீட்சை வினாத்தாள்கள்
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியேறியமை மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம் எனவும் இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.