Home உலகம் கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

0

கனடா (Canada) 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடிய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், கனடாவின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் பணியாற்ற வெளிநாட்டினர் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர்கள், சமையல்காரர் ஆகியோரின் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிரடி முடிவு

இது தவிர அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM – Science, Technology, Engineering, Mathematics) துறையில் அனுபவம் பெற்றவர்களையும், தொழில்துறை (Trades), விவசாயம் மற்றும் பிரஞ்சு மொழி திறமை கொண்டவர்களையும் கனடா வரவேற்க தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிரடி முடிவுகளால், அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கு விசா நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கனடா பக்கம் நோக்கி புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version