Home முக்கியச் செய்திகள் ஞானசாரியர் கல்லூரியின் 2025 கோலாகல கோடைவிழா

ஞானசாரியர் கல்லூரியின் 2025 கோலாகல கோடைவிழா

0

ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வாழும் ஞானசாரியர் கல்லூரி, கரவெட்டியின் பழைய மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் “2025 கோலாகல கோடைவிழா” இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள Valentines Park பகுதியில் மிகுந்த உற்சாகத்துடன், குடும்பமுழுவதும் மகிழ்வுடன் கழிக்கத்தக்க ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

மாறாத நினைவு

இந்த நிகழ்வு, காலத்தால் மாறாத நினைவுகளை மீட்டெடுக்கவும், கல்வியளித்த தாய்க் கல்வியினை கௌரவிக்கவும், பழைய மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும், சமூக உறவுகளை புதுப்பிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வை சிறப்பிக்க, பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.

மேலும், இந்நிகழ்வை சிறப்பிக்க Redbridge கவுன்சிலராகவும், முன்னாள் மேயராகவும் பணியாற்றிய Mr. தவதுரை ஜெயரஞ்சன் அவர்களும், Redbridge பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version