Home உலகம் கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி தொடர்பில் வெளியான தகவல்

0

கனடா (Canada) தன் பொருளாதார புலம்பெயர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 2025ஆம் ஆண்டில், பொருளாதார இயக்கப் பாதைகள் முன்னோடித் திட்டத்தின் (EMPP) அடிப்படையிலான, புதிய குடியிருப்பு அனுமதி வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது.

வழிமுறை இடம்பெயர்ந்த தனிநபர்கள் மற்றும் திறமையான அகதிகள் நாட்டில் வாழவும் வேலை செய்யவும் ஒரு நிலையான பாதையை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். 

கனடாவின் புலம்பெயர்தல்

இந்த அறிவிப்பு, 2025–2026க்கான கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் (IRCC) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, EMPP திட்டம் காலாவதியாகும் முன் இந்த புதிய திட்டம் துவங்கும் என கனடா அரசு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version