Home முக்கியச் செய்திகள் இனவாதத்திற்கு இடமே இல்லை: உறுதிபட அறிவித்த ஜனாதிபதி அநுர!

இனவாதத்திற்கு இடமே இல்லை: உறுதிபட அறிவித்த ஜனாதிபதி அநுர!

0

எந்த சூழ்நிலையிலும் இனவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்னேவ மகாவலி விளையாட்டரங்கில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, மாறாக வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அப்பாவி பெற்றோரின் பிள்ளைகள் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நோக்கம்

எனவே, இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வாய்ப்பு இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படாது என்றும் ஜனாதிபதி வலியுறுதியுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்கள் வலுப்படுத்தப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி அநுர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version