எதிர்வரும் 21ஆம் திகதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அணிதிரள வேண்டும்..
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றார்.
