Home இலங்கை குற்றம் இலங்கையில் 24 வயதுடைய மலேசிய யுவதி கைது

இலங்கையில் 24 வயதுடைய மலேசிய யுவதி கைது

0

கொழும்பு – பெல்லன்வில பகுதியில் 3 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் குழுவொன்று 24 வயதுடைய யுவதியை நேற்று (29) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பொலிஸார் விசாரணை

இதன்போது கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் பெறுமதி 11 கோடி ரூபா எனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கங்கொடவில நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/24-year-old-malaysian-woman-arrested-in-sri-lanka-1725025112

NO COMMENTS

Exit mobile version