கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று பெண்களும் பாங்கொக்கில் (Bangkok) இருந்து நேற்று இரவு (18) நாட்டிற்கு வருகை தந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
மீட்கப்பட்ட பொருட்கள்
குறித்த பெண்களிடம் தலா 1 கிலோ 104 கிராம் போதைப்பொருளும்,1 கிலோ 856 கிராம் போதைப்பொருளும், 2 கிலோ 288 கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண்கள் வெல்லம்பிட்டிய மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 25 , 48 மற்றும் 50 வயதுடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
