Home முக்கியச் செய்திகள் யாழில் சி.ஐ.டி வேடத்தில் நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

யாழில் சி.ஐ.டி வேடத்தில் நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

0

யாழில் (Jaffna) உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று 30 இலட்சம் ரூபா பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடையிலேயே நேற்று (16) மதியம் இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை புலனாய்வு பிரிவு (Cid) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த
மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

பின்னர் கடையில் இருந்தவர்களுடன்
அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/lxC52rUzxIc

NO COMMENTS

Exit mobile version