2005-2024 காலப்பகுதியில் 36 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபா பணம் வழங்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இன்று (17) நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டி.மு ஜயரத்னவுக்கு(D.M. Jayaratne) அதிகூடிய தொகை வழங்கப்பட்டதாகவும் அவருக்கு மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அம்புலன்ஸ்களை ஒப்படைத்த பிரதமர்
பிரதமர் அலுவலக மருத்துவப் பிரிவின் செலவு (செப்டம்பர் 2022 முதல் செப்டம்பர் 2024 வரை) ஒரு கோடியே 21 லட்சம். இந்த செலவுகளைத்தான் பிரதமர் அம்புலன்ஸ்களை ஒப்படைத்து குறைத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் எழுதுபொருள் செலவினங்கள் தொடர்பான மேலதிக மதிப்பீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதற்கு ஜனாதிபதி நிதி
வறுமைக்கு தீர்வாக ஜனாதிபதி நிதியிலிருந்து கல்வித் தேவைகள், சமய அனுஷ்டானங்கள், தேசத்திற்கு சேவையாற்றியவர்களுக்கு நிதி ஒதுக்க முடியும் எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர்கள்தான் அந்த நிதியின் நோக்கம். ஆனால் அந்த நிதியின் நோக்கத்திற்கு புறம்பாக வேறு நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
2005-2024 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து உதவி பெற்றவர்கள் இதோ,
பி. ஹெரிசன்
பியசேன கமகே
சுமேதா ஜயசேன
மனோஜ் சிறிசேன
பி தயாரத்ன
எஸ்சி முத்துக்குமாரன
வாசுதேவ நாணயக்கார
எஸ்.பி நாவின்ன
“இந்த நபர்களின் பெயர்கள் நேரடியாக உள்ளன. இன்னும் பல பெயர்கள் உள்ளன ..
“தயாசிறி பத்மகுமார ஜயசேகரவாக இருக்க வேண்டும்.”
பியால் நிஷாந்த டி சில்வா
சுசில் பிரேமஜயந்த
இசுர தேவப்பிரிய
” இன்னும் இருக்கிறார்கள்…
”
ஜகத்குமார – 10 இலட்சம் ரூபாய்
கே.பி.எஸ் குமாரசிறி – 953,430 ரூபாய்
ஜயலத் ஜயவர்தன – 10 இலட்சம் ரூபாய்
நாமல் குணவர்தன – 10 இலட்சம் ரூபாய்
தர்மதாச பண்டா – 10 இலட்சம் ரூபாய்
விதுர விக்கிரமநாயக்க – 15 இலட்சம் ரூபாய்
விமலவீர திஸாநாயக்க – 30 இலட்சம் ரூபாய்
லக்கி ஜெயவர்த்தன – 16.2 இலட்சம் ரூபாய்
பி சந்திரசேகரன் – 14 இலட்சம் ரூபாய்
ஜோன் அமரதுங்க – 40 இலட்சம் ரூபாய்
ஜோசப் மைக்கல் பெரேரா – 27 இலட்சம் ரூபாய்
டி.பி.ஏக்கநாயக்க – 48 இலட்சம் ரூபாய்
டபிள்யூ.எம்.எஸ்.பொன்சேகா (சரத் பொன்சேகா அல்ல) – 55 இலட்சம் ரூபாய்
ஜயந்த வீரசிங்க – 90 இலட்சம் ரூபாய்
எலிக் அலுவிஹாரே – 22 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் அலுவிஹாரே – 8.6 இலட்சம் ரூபாய்
ராஜித சேனாரத்ன – 100 இலட்சம் ரூபாய்
கெஹலிய ரம்புக்வெல்ல – 110 இலட்சம் ரூபாய்
எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன – 112 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் சொய்சா – 188 இலட்சம் ரூபாய்
தி மு ஜயரத்ன – 300 இலட்சம் ரூபாய்
எங்கள் ஊர் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு மூன்று நான்கு லட்சம் பெறுகிறார்கள்? இவை ஏழ்மையை ஒழிக்க எழுதப்பட்டவையா? அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். ஜனாதிபதியின் நிதியை இந்த சபையின் தலைவர் இவ்வாறுதான் பயன்படுத்தியுள்ளார். இந்த விடயங்கள் இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது. குழந்தைகளுக்காக செலவழிக்க வேண்டிய பணம் இது என அவர் மேலும் தெரிவித்தார்.
you may like this
https://www.youtube.com/embed/AfsiSC7ggw4