Home இலங்கை பொருளாதாரம் புத்தாண்டு தினத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் குவிந்த வருமானம்

புத்தாண்டு தினத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் குவிந்த வருமானம்

0

தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான நேற்றைய (14) நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 39 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை வீதி அபிவிருத்தி அதிகார சபை (Road Development Authority) தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்று வரை 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

5 இலட்சம் வாகனங்கள்

குறித்த காலப்பகுதியில் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 19,637 வாகனங்கள் பயணித்துள்ளன.

இந்த நிலையில், அதன் மூலம் 39 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version