ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் முன்வந்துள்ள போதிலும், 06 வேட்பாளர்களே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி(Rohana Hettiarachchi) தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர் செலவுகளை நாளை (19) அல்லது வர்த்தமானி மூலம் அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அறிவிப்புக்கு பிறகு அனைத்து வேட்பாளர்களும் அதன்படி செயல்படுவார்கள் என்றார்.
பாரதூரமான மோதல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள்
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் இதுவரையில் பாரதூரமான மோதல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் எதுவும் பதிவாகவில்லை என நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக இயன்றவரை பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தல் பேரணி
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் பேரணிகளுக்கு அவமரியாதை இல்லாத வகையில் தேசிய கொடி மற்றும் பௌத்த கொடியை பயன்படுத்துமாறு நிறைவேற்று பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.