யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல்கட்சிகளும் 23 சுயேட்சை குழுக்களும்
தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அவற்றை பரீசிலித்ததன்
அடிப்படையில் 2 சுயேட்சைக் குழுக்களுடைய வேட்பு மனுக்கள் சரியான காரணங்கள்
குறிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக பெயர் குறித்த நியமனப்பத்திரங்கள் தொடர்பான
முடிவுகளை அறிவித்த போதே யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் இன்று இதனை
தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல்
அந்த வகையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 23
சுயேட்சை குழுக்களும் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
அதற்கமைய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகள்
மற்றும் சுயேட்சைக் குழுக்களாக 396 பேர் போட்டியிடவுள்ளனர் என்றும் அவர்
கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேர்
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் – ராகேஸ்