Home இலங்கை அரசியல் வவுனியா மாநகரசபைக்கு நான்கு பெண் உறுப்பினர்கள் நியமனம்!

வவுனியா மாநகரசபைக்கு நான்கு பெண் உறுப்பினர்கள் நியமனம்!

0

வவுனியா மாநகரசபையில் மேலதிக ஆசனங்களின் மூலம் நான்கு பெண் உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் பெண்களுக்கான இட
ஒதுக்கீட்டின் மூலம் 5 பெண்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்.

இருப்பினும்
வட்டாரத்தில் ஒரு பெண் வேட்பாளரே நேரடியாக வெற்றி பெற்றிருந்தார்.

பெண் உறுப்பினர்கள்

அந்தவகையில் மூன்று மேலதிக ஆசனங்களை பெற்ற தமிழரசுக்கட்சியில் வைரமுத்து
வரதலட்சுமி,உருத்திரசிங்கம் யோகேஸ்வரி,
ரவீந்திரன்லக்ஷிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஜனநாயக தமிழ்த்தேசிய
கூட்டணியின் ஒரு ஆசனத்திற்கு சஜீவினி அபிஷேக் நியமிக்கப்பட்டார்.

அகில இலங்கை தமிழ்காங்கிரசின் ஒரு மேலதிக ஆசனம் நடராசா
தருமரத்தினத்திற்கும்,ஜனநாயக தேசியகூட்டணியின் ஆசனம் பரமேஸ்வரன் கார்த்தீபன்
அவர்களுக்கும், சுயேட்சைகுழு ஒன்றின் ஆசனம் சிவராமலிங்கம் கிரிதரனுக்கும் ஜக்கியமக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்கள்
அப்துல்பாரி, முகம்மது லறீப் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version