நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமை தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களுக்கு தெரிவிக்காத காரணத்தினால் 44% மக்கள் வாக்களிக்க முடிவு செய்யவில்லை எனவும், அதற்கேற்ப நாட்டை கட்டியெழுப்பக்கூடியவர் தான் மட்டுமே எனவும் தம்மிக்க பெரேரா (dhammika perera) தெரிவித்துள்ளார்.
இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையின் தற்போதைய கல்வி முறைக்கு பதிலாக சர்வதேச கல்விக்கு நிகரான கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் என டி.பி.எஜுகேஷன் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்கள்
சமூக வலைத்தளங்களில் நடக்கும் தவறான செயல்களைப் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம், உலகின் பிற நாடுகளின் குழந்தைகளுடன் போட்டியிடக்கூடிய குழந்தைகளின் தலைமுறையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.
அனுராதபுரத்தில் நிறுவப்பட்ட டி.பி.கல்வி நிலையத்தின் தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் கல்வி பயின்ற புதிய முதுநிலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தம்மிக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கையின் மிகப்பெரும் கட்சியான மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக தனது செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நபரை அதிகாரத்திற்கு கொண்டு வருவதே மக்களின் பிரதான இலக்கு எனவும், ஆனால் இது தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களும் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் எந்தவொரு கட்சியும் இதுவரை தமது கருத்துக்களை தெரிவிக்காத காரணத்தினால் 44 வீதமான மக்கள் வாக்களிக்க முடிவெடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு நாட்டிற்குத் தேவை என்றும், அதைச் செய்யக்கூடிய ஒரே நபர் தானே என்றும் தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்தார்.