Home இலங்கை அரசியல் கிளிநொச்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 400 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நியமனம்

கிளிநொச்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 400 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நியமனம்

0

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளுக்காக 400
பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும்
பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன்
தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(19.09.2024) பிற்பகல் வாக்கெண்ணும்
அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றதையடுத்து
ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பாதுகாப்பு கடமை

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து
தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும் எட்டு வாக்கெண்ணும்
நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இதுவரை தேர்தல் தொடர்பான பதினொரு முறைப்பாடு முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

வாக்கு பெட்டிகளை எடுத்து செல்வதற்கு 40 பேருந்துகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு
கடமைகளுக்காக 400 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான சகல
ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version