யாழில் (Jaffna) 400 வருடங்கள் பழமையான ஆதி சிவன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
யாழ். வட்டுக்கோட்டை துணவி கிராமத்தில் வயலும் வயல் சார்ந்த மருத நில பரப்பில்
அமைந்துள்ள பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயத்திலேயே குறித்த வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகள் இன்று (29)
காலை 9.20 மணி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
400 வருடங்கள்
400 வருடங்களுக்கு மேல் பழைமையான பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயம் பழைமை மாறாத
வகையில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
[UQFYN8K
]
கும்பாபிஷேக நிகழச்சி
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதர் மற்றும் சங்கானை பிரதேச செயலர் ஆகியோரும் குறித்த
கும்பாபிஷேக இந்நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.
அப்பிரதேச அடியார்கள் கும்பாபிஷேக நிகழச்சியில்
பங்குபற்றி ஆதிசிவனின் திருவருளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.