Home முக்கியச் செய்திகள் 43 குற்றச்சாட்டுகள் : தப்பிப்பிழைக்குமா கெஹலிய குடும்பம்…!

43 குற்றச்சாட்டுகள் : தப்பிப்பிழைக்குமா கெஹலிய குடும்பம்…!

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல(keheliya rambukwella) மற்றும் அவரது குடும்ப
உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை
விசாரிக்கும் ஆணையம் இன்று(26) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்தக்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

43 குற்றச்சாட்டுக்கள் பதிவு 

 ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம்
மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் 43 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

 இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் அவர்களின் சொத்துக்கள் பற்றிய
விசாரணைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமீபத்தில் தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version