நாளை மறுதினம் அநுர அரசுக்கெதிராக நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், அவர்களின் வாக்குறுதிகளை
நினைவுபடுத்தும் முகமாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப்பேரணி அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல.
நாடாளுமன்ற தேர்தலில் எமக்கு இருந்த எதிர்ப்பை விடவும் தற்போது சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத்தின் குண்டசாலை அமைப்பாளர் றிசாட் மஹ்ருப்.
லங்கா சிறிக்கு அவர் அளித்த நேர்காணலில் இந்த பேரணிக்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் அரசின் வாக்குறுதிகள் தொடர்பாகவும் தெரிவித்தவை காணொளியில்…
https://www.youtube.com/embed/HX0ZgohV91A
