வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய அரசியல் தீர்வு தேவை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களை இன்று (19.11.2025) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் புதிய அரசியலமைப்பின் அவசியம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விதித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
அத்துடன், பழைய அரசியல் தீர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இனி பொருத்தமானவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் தீர்வு தொடர்பில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நிலப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் தேவைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் எழுப்பிய சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டில் இனவாத வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
