Home இலங்கை சமூகம் நாடு முழுவதிலும் 50000 மின் தடை சம்பவங்கள்

நாடு முழுவதிலும் 50000 மின் தடை சம்பவங்கள்

0

நாடு முழுவதிலும் சுமார் 50000 மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு 8.00 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில், நாடு முழுவதிலும் 50,009 மின்விநியோக தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

தற்போது வரை 14,031 மின்தடை சம்பவங்களில் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படடுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள பிரச்சனைகளை தீர்க்கும் பணியில் சீரமைப்பு குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

மழை, காற்றுடன் கூடிய வானிலை, தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் இந்த மின்தடை சம்பவங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் பொறுமையுடன் இருக்குமாறு மற்றும் அவசர தேவைகளுக்கு மின் சபையின் அவசர அழைப்பு இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version