யாழ். மாவட்ட அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(30) நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான
இராமலிங்கம் சந்திரசேகர், இணைத் தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்.மாவட்ட செயலாளர் ம.பிரதீபன்
, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன்,கே.இளங்குமரன், ஸ்ரீ
பவானந்தராஜா,ஜெ.றஜீவன், இ.அர்ச்சுனா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு
மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,
பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள்,
இராணுவ உயர் அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்
உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்.
வரவுசெலவுத் திட்டம்
குறித்த கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்
திட்டத்தின் ஊடக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள்,
அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்படது.
அத்துடன் விவசாயம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைசார்
விடையங்கள் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக அம்புலன்ஸ் சாரதிகள் பற்றாக்குறை தொடர்பியாக இருக்கும் பிரச்சினைகள்
ஆராயப்பட்டன.
மேலும், காணி விடுவிப்பு, தென்னை பயிரழிவு போன்றவிடையங்கள் தொடர்பாகவும்
கவனம் செலுத்தப்பட்டது.
