Home உலகம் 6000 உக்ரைன் படையினரின் உடல்களை ஒப்படைக்க தயாராகும் ரஷ்யா : ஜெலன்ஸ்கி விடுத்த அறிவிப்பு

6000 உக்ரைன் படையினரின் உடல்களை ஒப்படைக்க தயாராகும் ரஷ்யா : ஜெலன்ஸ்கி விடுத்த அறிவிப்பு

0

ரஷ்யா(russia) உக்ரைனுக்கு(ukraine) திருப்பி அனுப்ப விரும்பும் 6,000 வீரர்களின் உடல்களில், 15% மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) கூறியுள்ளார்.

 “எங்கள் வீழ்ந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க ரஷ்யர்கள் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர், ஆனால் இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக ஆராய வேண்டும், மேலும் நான் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமியோரோவிடம் இது தொடர்பாக தெரிவிதுள்ளேன் என உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ரஷ்ய வீரர்களின் உடல்களும் அடங்கும்

நான் அறிந்தபடி, இந்த 6,000 பேரில் 15%  மட்டுமே அடையாளம் காணப்பட்டதால், எல்லாவற்றையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். எங்கள் வீரர்கள் அனைவரும் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். இருப்பினும், அவர்கள் உடல்களை ஒப்படைத்தபோது எங்களுக்கு அவற்றை அடையாளம் காண்பதற்கான கடப்பாடு உள்ளது. மேலும் அவற்றில் ரஷ்ய வீரர்களின் உடல்களும் அடங்கும்.” என தெரிவித்தார்.

 ஜூன் 2 (இன்று)துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைனும் ரஷ்யாவும் உயிரிழந்த வீரர்களின் உடல்களை 6,000 ற்கு 6,000 என பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version