Home முக்கியச் செய்திகள் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தமிழர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண்

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தமிழர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண்

0

திருகோணமலையைச் (Trincomalee) சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனபடிப்படையில், எதிர்வரும், நான்காம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் செயல் 

இந்தநிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இலங்கை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் என சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version