Home சினிமா வெளிவந்து 7 ஆண்டுகள் ஆகும் விவேகம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

வெளிவந்து 7 ஆண்டுகள் ஆகும் விவேகம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

அஜித் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் அஜித் முதல் முறையாக நடித்த திரைப்படம் வீரம். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து வேதாளம் படத்தில் இருவரும் இணைந்தனர். இப்படமும் அஜித்தின் கெரியரில் முக்கிய திரைப்படமாக மாறியது.

விவேகம்

இதன்பின் இவர்கள் இணைந்த திரைப்படம் தான் விவேகம். ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை எடுத்திருந்தனர். ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருந்த இப்படம் சற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால், இப்படத்திற்காக மிகவும் கடினமாக அஜித் உழைத்திருந்தார். இப்படத்தின் மேக்கிங் வீடியோ கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

வசூல் 

இந்த நிலையில் விவேகம் திரைப்படம் வெளிவந்து 7 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், விவேகம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 128 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/7-years-of-vivegam-movie-box-office-collection-1724480777

NO COMMENTS

Exit mobile version