Home இலங்கை அரசியல் ரணில் வெற்றி பெறமாட்டார்: நாட்டில் இருந்து வெளியேறப்போகும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ரணில் வெற்றி பெறமாட்டார்: நாட்டில் இருந்து வெளியேறப்போகும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் காரணமாக, பொதுஜன பெரமுனவின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேற விமான பயணச்சீட்டுக்களை பதிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என்பதை அறிந்ததன் காரணமாகவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர் என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அனுரவை ஊக்குவிக்கும் ரணில்

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர், சஜித் பிரேமதாச வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே, ரணில் விக்ரமசிங்க, பொதுவில் அனுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிப்பதாக தெரிகிறது என்றும் முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version