Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி 9 வயது சிறுமி பரிதாப மரணம்

முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி 9 வயது சிறுமி பரிதாப மரணம்

0

முல்லைத்தீவு (Mullaitivu) – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (03) மாலை முள்ளியவளை தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியின் மாமூலைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பட்டா ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

சாரதி கைது

உயிரிழந்த சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது்.

இந்தநிலையில், வாகனத்தினை செலுத்திய சாரதி முள்ளியவளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/9-years-girl-died-accident-in-mulliyawalai-1720009515

NO COMMENTS

Exit mobile version