Home இலங்கை சமூகம் நூற்றுக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

நூற்றுக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை

இதன்மூலம் வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கமைய திங்கட்கிழமை (26) வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Source: https://tamilwin.com/article/900-bank-accounts-were-frozen-collect-tax-arrears-1724591448

NO COMMENTS

Exit mobile version