Home இலங்கை சமூகம் இலங்கையில் 97 வயதில் சாதித்த பெண்

இலங்கையில் 97 வயதில் சாதித்த பெண்

0

அண்மையில் இடம்பெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் (University of Kelaniya) 143 ஆவது பட்டமளிப்பு விழாவில் 97 வயதான லீலாவதி அசிலின் தர்மரத்ன (
Lilavati Asilin Dharmaratne) பாலி மற்றும் பௌத்தத்தில் முதுகலைப்பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

லீலாவதி அசிலின் தர்மரத்ன 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வஹரணவிலுள்ள மில்லவ கிராமத்தில் பிறந்தவர்.

97 வயதில் சாதனை

அவர் தனது ஆரம்ப கல்வியை மில்லவ பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார்.

இதன்பின்னர் உயர்தரத்தில் சித்திப்பெற்று ஆசிரியர் பணியில் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.

1962ஆம் ஆண்டு நடைபெற்ற நொத்தாரிசுகளுக்கான பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற லீலாவதி நொத்தாரிசு பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பெண் என்ற விருதையும் பெற்று பாராட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது லீலாவதி அசிலின் தர்மரத்ன பாலி மற்றும் பௌத்தத்தில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளார்.

முதுகலைப் பட்டம்

இந்த முதுகலைப் பட்டம் தன் வாழ்வில் கிடைத்த மாபெரும் சாதனை என்றும் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி வரலாற்றில் விசேட மைல்கல்லாக விளங்கும் லீலாவதி பெற்ற இந்த முதுகலைப் பட்டம் உயர்கல்வியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/97-year-old-lady-achieves-master-s-in-buddhism-1724386180

NO COMMENTS

Exit mobile version