Home முக்கியச் செய்திகள் நபரை கடத்தி கொடூர தாக்குதல்! கொழும்பில் நடந்த பயங்கரம்

நபரை கடத்தி கொடூர தாக்குதல்! கொழும்பில் நடந்த பயங்கரம்

0

கொழும்பு(Colombo) – மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(29.12.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்குளி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணை

குறித்த நபரைக் கடத்த முச்சக்கரவண்டியொன்றில் 6 பேர் வந்ததாக கூறப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அதிகமானோர் வந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் போதைப்பொருள் தொடர்பான தகராறே கடத்தலுக்கான காரணம் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version