Home உலகம் இம்ரான் கானை விடுவிக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச அழுத்தம்

இம்ரான் கானை விடுவிக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச அழுத்தம்

0

இம்ரான் கானை (Imran Khan) விடுவிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்த நிலையில் பாகிஸ்தான் அரசு அவரது கட்சியுடன் கடந்த 23ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் (Pakistan) தெஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இருந்த ராணுவ அலுவலகங்கள், ஜின்னா ஹவுஸ் உள்ளிட்ட முக்கியமான கடடங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர்.

இந்த வழக்கில் கடந்த 2023ஆம்ஆண்டு இம்ரான் கான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரமாண்ட பேரணி

குறிப்பாக இம்ரான் கான் மீது மட்டும் ஊழல், பரிசு பொருட்களை விற்றது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பாகிஸ்தான் அரசு தொடுத்துள்ளது.

இதில் ஒரு சில வழக்குகளில் மட்டும் இம்ரான் கானுக்கு பினை வழங்கப்பட்டது எனினும் இன்னும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர இயலவில்லை.

இம்ரான்கானை விடுவிக்கும்படி கடந்த நவம்பர் 26ஆம் திகதி பிடிஐ கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

பாகிஸ்தான் அரசு

இந்த பேரணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவரது பிடிஐ கட்சியின் தொழில்நுட்ப அணியினர் ரீலீஸ் இம்ரான்கான் என்ற ஹேஸ்டேக்கை சர்வதேச அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால் சர்வதேச அளவில் இம்ரான்கானை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க உள்ளதாகவும் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version