திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று (26)தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனிநபர் போராட்டத்தில் தனது பட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்துள்ளார்.
அரச துறையில் நியமனம்
கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி, அரச துறையில் நியமனத்தை வழங்குங்கள்… கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
