முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின்
தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த வருட இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியாகும் சாத்தியம் உள்ளது.
இலங்கையை விட்டு வெளியேறும் ரணில்
அதன் பிரகாரம் அடுத்த வருட முற்பகுதியில் ரணில் விக்ரமசிங்க, இலங்கையை
விட்டும் வெளியேறி விடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலும் அவர் வேறொரு நாட்டில்
குடியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ரணிலின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் மிக
விரைவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் பதவியொன்றுக்கு
நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த காலங்களில் அவர் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகைதரு
பேராசிரியராக (விசிட்டிங் புரோபசர்) கடமையாற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.