Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியில் இருந்து அதிரடியாக இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்

தமிழரசுக் கட்சியில் இருந்து அதிரடியாக இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்

0

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் கட்சியின் தீர்மானத்தை மீறி நடுநிலை வகித்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஒரு வார கால அவகாசம்

குறித்த கடித்தில், “வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் மிகத் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் நடுநிலை வகித்துள்ளீர்கள்,ஆகையால் உடனடியாக நடைமுறைக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள்.

தங்களது இந்த நடவடிக்கை சம்மந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என்ற அடிப்படையிலும் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இல்லாவிட்டாலும் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீரகள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version