Home இலங்கை சமூகம் பெண்களுக்கு பெரும் நிவாரணம்! அமைக்கப்படவள்ள தனி ஆணைக்குழு

பெண்களுக்கு பெரும் நிவாரணம்! அமைக்கப்படவள்ள தனி ஆணைக்குழு

0

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க மகளிர் ஆணைக்குழுவொன்றை அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 34 ஆம் எண் பெண்கள் அதிகாரமளிப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி இந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முறைப்பாடுகள்

இந்த மகளிர் ஆணைக்குழுவின் மூலம், அரசு மற்றும் தனியார் திணைக்கள பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், துன்புறுத்தல்கள் மற்றும் அநீதிகள் குறித்து முறைப்பாடு அளிக்க முடியும்.

இது பெண்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version