தெற்காசியாவில் முதல் தடவையாக முற்றுமுழுதாக பெண்களால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல் ஒன்று இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை, கண்டலம பிரதேசத்தில் அம்ப யாளு எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த ஹோட்டல் கடந்த 10ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை
முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஹோட்டலில் முகாமையாளர், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துப்பணிகளுக்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நூறுவீதம் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டல் இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.