Home இலங்கை அரசியல் இலங்கை அரசியல் அரங்கின் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர்! மாவைக்கு ஜீவனின் அஞ்சலி

இலங்கை அரசியல் அரங்கின் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர்! மாவைக்கு ஜீவனின் அஞ்சலி

0

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தவைவர் மாவை சேனாதிராஜா இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராக இருந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான, மாவை சேனாதிராஜா, காலமான செய்தியை கேட்டு நான் மிகுந்த கவலையடைகின்றேன்.

ஆழ்ந்த இரங்கல்

நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார்.

இந்த கடினமான சூழ்நிலையை கடந்து செல்லும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version