Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

யாழ்ப்பாணம் உட்பட கொழும்பு மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த வளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல் 

இந்நிலையில், அசுத்தமான காற்றை சுவாசிப்பதனால் சுவாச ரீதியான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version