ஆரோமலே
நேற்று தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த படம் ஆரோமலே. அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இப்படத்தை இயக்கியிருந்தார்.
கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதி.. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், ஆரோமலே படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 70+ லட்சம் வசூல் செய்துள்ளது. முதல் நாள் சுமாரான வசூல் கிடைத்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
