Home ஏனையவை ஆன்மீகம் ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தல 70வது வருடாந்த திருவிழா

ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தல 70வது வருடாந்த திருவிழா

0

இலங்கையின் திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை
புனித சதா சகாய அன்னை திருத்தல 70வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் மிக
சிறப்பாக நிறைவு பெற்றது.

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்று விளங்கும் கத்தோலிக்க திருத்தலங்களில்
ஒன்றான மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தலத்தின்
திருவிழா பங்குத்தந்தை அருட்பணி ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் கடந்த மாதம் 30ம்
திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

இன்றைய தினம் திருவிழாவின் திருப்பலி பூஜை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா
ஆண்டகை அவர்களினால் நடாத்தப்பட்டது.

திருப்பலி

திருப்பலியைத் தொடர்ந்து மரியாளின் பிறந்த தினமாகிய இன்று கேக் வெட்டி
கொண்டாடப்பட்டதுடன் அன்னையின் திருச்சுரூப பவனியினை தொடர்ந்து ஆலய முன்றலில்
நடைபெற்ற விசேட அன்னையின் திருச்சுரூப ஆசீர்வாதத்துடன் கொடி இறக்கப்பட்டு
திருவிழா மிக சிறப்பாக நிறைவு பெற்றது.

இத்திருவிழாவின் திருப்பலி பூஜையில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர் ஜே ஜே முரளிதரன் மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்யானந்தி
மட்டக்களப்பு 233ம் படைப்பிரிவின் கட்டளை தளபதி, ஆயத்தியமலை போலீஸ் நிலைய
பொறுப்பதிகாரி மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் நாடு
பூராவும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version