Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 40 வேட்பாளர்கள்: நிறைவுக்கு வந்த கால அவகாசம்

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 40 வேட்பாளர்கள்: நிறைவுக்கு வந்த கால அவகாசம்

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (14ஆம் திகதி) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.

மேலும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு 

அதற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தையை அண்மித்த பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று தினங்களில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்களிக்கும் வாய்ப்பு

செப்டெம்பர் 4ஆம் திகதி மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் செயலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் அ தபால் மூல வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், செப்டம்பர் 11 மற்றும் 12ம் திகதிகளில் மீண்டும் தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version