Home இலங்கை சமூகம் அம்பாறையில் கோர விபத்து : பரிதாபமாக 14 வயது சிறுமி பலி

அம்பாறையில் கோர விபத்து : பரிதாபமாக 14 வயது சிறுமி பலி

0

அம்பாறையில் (Ampara) தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது அம்பாறை – காரைத்தீவு (Karaitivu) வீதியில் மாவடிப்பள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, சம்மாந்துறை 10, சாலி வீதியில் வசித்து வந்த 14 வயது சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்மாந்துறையில் இருந்து காரைத்தீவு சந்தி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்து சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், சிறுமி உயிரிழந்துள்ள நிலையில் விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

Source: https://ibctamil.com/article/accident-in-ampara-1726727794

NO COMMENTS

Exit mobile version