Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து விசேட ஆய்வு

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து விசேட ஆய்வு

0

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச (Mahinda Rajapaksa) வசிக்கும் தற்போதைய இல்லத்தில் கடந்த வாரம் மதிப்பீட்டுத் திணைக்களம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது.

அதன் பிரகாரம் மகி்ந்த ராஜபக்‌ச வசிக்கும் இல்லத்தின் தற்போதைய வாடகைப் பெறுமதி 46 லட்சம் ரூபாய் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் தீர்மானம்

அதே ​போன்று ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) , மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) , கோட்டாபய ராஜபக்‌ச (Gotabaya Rajapaksa) மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் துணைவியார் ஹேமா பிரேமதாச ஆகியோர் வசிக்கும் இல்லங்கள் குறித்தும் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மூலமாக ஆய்வொன்றை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதன்பின் பெரும்பாலும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்று தெரிய வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version