Home இலங்கை பொருளாதாரம் சீமெந்தின் விலையை குறைக்க நடவடிக்கை: வெளியான அறிவிப்பு

சீமெந்தின் விலையை குறைக்க நடவடிக்கை: வெளியான அறிவிப்பு

0

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன், ஒரு மூடை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

சீமெந்தின் விலை

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (08) நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு ஒழுங்குவிதிகளில் மூன்று ஒழுங்கு விதிகளுக்கும், கட்டளை ஒன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version