திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று ஹாலிவுட் வரை தனது கால்தடத்தை பதித்திருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் இந்த சிறுவன் யார் என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.
தனுஷ்
அவர் வேறு யாருமில்லை, நடிகர் தனுஷ்தான். ஆம், கோலிவுட்டில் தனது திரை பயணத்தை துவங்கி, அதன்பின் பாலிவுட் சென்று தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகர் தனுஷின் சிறு வயது புகைப்படம்தான் இது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி Boy Friends அனுப்புற.. நடிகை அமலா பால் ஓபன் டாக்
குபேரா
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக குபேரா படம் வருகிற 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற 20ம் தேதி திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
