ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக TJ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வெளிவந்தது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
பா.ரஞ்சித் படத்தில் இணையும் முன்னணி நடிகர்.. வெறித்தனமான அப்டேட் இதோ
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74 – வது பிறந்தநாள் என்பதால் சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் பதிவு
இந்நிலையில், நடிகரும் ரஜினியின் முன்னாள் மருமகனுமான தனுஷ் அவரது ட்விட்டர் தளத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் அது என்றும் ரஜினிகாந்த் தான். என் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Happy birthday to the one, only one, super one .. SUPERSTAR .. the phenomenon that redefined mass and style .. my thalaiva 🙏🙏🙏 @rajinikanth sir ❤️❤️
— Dhanush (@dhanushkraja) December 12, 2024