Home உலகம் இலங்கையில் அரிய வகை நீல இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

இலங்கையில் அரிய வகை நீல இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

0

நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் இயற்கையாகவே பிரமிட் வடிவில் உருவாகியுள்ள வெட்டப்படாத அரிய வகை நீல இரத்தினக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

எனினும், இந்த அரிய நீல இரத்தினக்கல்லின் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

17.42 கெரட் எடை கொண்ட குறித்த இரத்தினக்கல் பதுளை பசறை பகுதியில் உள்ள சுரங்கமொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அந்நியச் செலாவணி

மேலும், அதற்கு தேசிய ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உலகச் சந்தையுடன் இணைவதற்கும் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் இலங்கைக்கு இந்த மாணிக்கம் ஒரு சிறந்த சந்தர்ப்பம் என அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version