Home சினிமா கார் முன்பு சுத்தமாக நொறுங்க பயங்கர விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. ஷாக்கிங் தகவல்

கார் முன்பு சுத்தமாக நொறுங்க பயங்கர விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. ஷாக்கிங் தகவல்

0

ஜீவா நடிகர்

தமிழ் சினிமாவில் உள்ள செம கூலான நடிகர்கள் பலர் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகர் ஜீவா, படங்களில் கதைக்காக சீரியஸாக நடிக்கும் இவர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலும் மிகவும் கலகலப்பாக தான் நிகழ்ச்சியை கொண்டு செல்வார். 

மிகவும் சீரியஸான பிரபலமாக இல்லாமல் கூலான நடிகராக வலம் வந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற ஜீவாவிடம் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பத்திரிக்கையாளர் கேட்க கொஞ்சம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது, அந்த வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் நடிகர் ஜீவா சின்ன சேலம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கியுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே வந்ததால் சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் கார் மோதியுள்ளது.

இந்த விபத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் லேசான காயங்களுடன் பிரபலம் தப்பித்ததாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version